.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
தியாக தீபம் திலீபனுடன் 12 நாட்கள்
 
திலீபனின் பயணத்தின் பதினோராவது நாள் அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்
Wednesday, 25.09.2013, 12:00am (GMT)

Thileepan11th

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25ம் திகதி இது திலீபனின் இறுதிப்பயணத்தின் பதினோராவது நாள் திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புக்களும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன கை கால்கள் சில சமயம் தானாகவே அசைகின்றன அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.என்பதை இதன் மூலம் தான் அறியமுடிகிறது கோமாவுக்கு முந்திய செமி கோமா நிலையில் ஒரு நோயாளி எவ்வளவு கஸ்டப்படுவாரோ அதைப் போல் அவர் உடல் தன்னையறியாமலே அங்கும் இங்கும் புரளத்தொடங்கியது. அவர் படுத்திருந்தது ஒரு சிறிய கட்டில் ஆகையால் தேவரிடம் சொல்லி பெரிய கட்டில் ஒன்று கொண்டுவரச் செய்து அதில் திலீபனை படுக்கவைத்தோம் அப்போது தான் அவர் கட்டிலில் ஏற்கனவே சிறுநீர் கழித்திருந்ததை காணமுடிகிறது மாறன் நவீனன் தேவர் ஆகியோர் மிகக் கஸ்ரப்பட்டு அவரது ஆடைகளை மாற்றி புத்தாடை அணிவித்தனர்.

அவர் சுயநினைவோடு இருக்கும் போது புது ஆடைகளை அணியும் படி  பல முறை நான் கேட்டிருந்தேன்  பிடிவாதமாக மறுத்துவிட்டார் சாகப்போறவனுக்கு எதுக்கு வாஞ்சியண்ணை புது உடுப்பு என்று தனக்கே உரிய சிரிப்புடன் கேட்டார் அதை இப்போது நினைத்து பார்க்கிறேன் பிற்பகல் நாலு மணியளவில் திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்கு வந்தது  ஆம் அவர் முழுமையான கோமா நிலைக்கு வந்துவிட்டார். மைதானத்தில் கூடியிருந்த சனக்கூட்டத்தினர் திலீபனின் நிலை கண்டு மிகவும் வருந்தினர் ஒவ்வொருவர் முகத்திலும் சோகத்திரை படர்ந்திருந்தது இன்று காலையிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வந்து குவிந்து கொண்டிருந்தனர்.

லொறிகள் பஸ்கள்  வான்கள் கார்கள் ஏன் மாட்டு வண்டில்களில் கூட அவர்கள் சாரி சாரியாக வந்து நிறையத் தொடங்கினர் யாழ்ப்பாணத்திலோ அல்லது இலங்கையின் எந்தப்பகுதியிலுமோ இதுவரை எந்த நிகழ்ச்சிக்கும் இப்படி மக்கள் வெள்ளம் போல் நிறைந்ததாக சரித்திரமே இல்லை இன்று திருகோணமலையில் விறகு ஏற்றிச்சென்று கொண்டிருந்த எட்டு அப்பாவித் தமிழ் மக்கள் சிங்கள குடியேற்ற வாசிகளால் வெட்டிக் கொல்லப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது நாளை முதல் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களும் போக்குவரத்து சேவை ஊழியர்களும் திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதமும் மறியலும் செய்து தமது வேலைகளை பகிஸ்கரிக்க போவதாக சகல பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி சேவையில் கடந்த பத்து நாட்களாக தினமும் இரவு ஏழு மணி முதல் விசேட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தது இப்போது இரவு திலீபனின் உடல்நிலை மேலும் மோசமடையத்தொடங்கி விட்டது. அவர் சுவாசிக்க மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார். திலீபன் சுயநினைவுடன் இருந்த போது அவர் விரும்பிக் கேட்க்கப்படும் பாடல் ஒன்றை இன்று இரவு மேடையில் ஒலிபரப்பினார்கள் அந்தப்பாடல் எனக்கு மட்டுமன்றி திலீபன் இருந்த அந்த நிலையில் அனைவரது கண்களிலிருந்தும் கண்ணீரை வரவழைத்து விட்டது. ஓ மரணித்த வீரனே  உன் ஆயுதங்களை எனக்கு தா உன் சீருடைகளை எனக்கு தா உன் பாதணிகளை எனக்கு தா ஓ மரணித்த வீரனே கூட்டத்திலே சில பெண்கள் இந்த பாடலை கேட்டதும் விம்மி விம்மி அழத்தொடங்கினர் அந்த வேதனை மிக்க இரவு சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருந்தது. இரவே நீ இரக்கமில்லாமல் எம்மை விட்டு மறைந்து கொண்டிருக்கிறாய்.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
24ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 26ம் ஆண்டின் 10,ம் நாள் இன்று. (24.09.2013)
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 26ம் ஆண்டின்  9ம்  நாள் இன்று. (23.09.2013)
22ம் திகதி இது தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 26ம் ஆண்டின் 8ம்  நாள் இன்று.. (22.09.2013)
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 26ம் ஆண்டின்  7ம்  நாள் இன்று..  (21.09.2013)
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 26ம் ஆண்டின் ஆறாம்  நாள் இன்று..  (20.09.2013)
தியாகி திலீபனின் ஈழ விடுதலைப் பயணத்தின் 26ம் ஆண்டின் ஐந்தாம் நாள் இன்று! காணொளி இணைப்பு (19.09.2013)
தியாகி திலீபனின் ஈழவிடுதலைப் பயண வரலாற்றின் 26ம் ஆண்டின் நான்காம் நாள் இன்று! காணொளி (18.09.2013)
தியாகி திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் 26ம் ஆண்டின் மூன்றாம் நாள் இன்று! காணொளி இணைப்பு (17.09.2013)
தியாக தீபம் திலீபன் அவர்களின் 26ம் ஆண்டின் இரண்டாம் நாள் இன்று! காணொளி இணைப்பு (16.09.2013)
தியாக தீபம் திலீபன் அவர்களின் 26 ம் ஆண்டின் முதலாவது நாள் இன்று! காணொளி இணைப்பு. (15.09.2013) 
::| Latest News
 

Site Created By: Thiliepan