.:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.
விருந்தினர் தற்போது உள்ளனர்
 
 
  ::| தேடல்:     [மேம்பட்டத் தேடல்]  
 
 
 
 
காணொளிச் செய்திகள்
 
எல்லா பேதங்களையும் மறந்து தமிழீழம் எனும் ஒற்றை வார்த்தைக்காக அனைவரும் ஒன்றுகூடவேண்டும்!
Thursday, 23.02.2012, 11:35pm (GMT)

எதிர்வரும் 27 ஆம் திகதி (27.02.2012) ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவரும் திரண்டு சர்வதேச போர்குற்ற விசாரணையை வலியுறுத்தியும், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அனீதிகளுக்கான நீதியை கோரியும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என்று தமிழ் உணர்வாளரும், ஈழத்தமிழருக்காக எப்போது குரல்கொடுப்பவருமான நடிகர் சத்தியராஜ் மற்ரும் நாம் தமிழ்ர் இயங்க ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்தோடு ஜெனீவா நோக்கி பல நாட்களாக மனித நேய நடைப்பயணம் மேற்கொள்ளும் தம்பிகளின் நடைப்பயணங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துக்களையும் கூறியுள்ளனர். இந்த ஐ.நா நோக்கிய ஒன்றுகூடலுக்கு அழைப்பை விடுத்துள்ள நடிகர் சத்தியரஜ் தெரிவிக்கையில்…..

இலங்கைக்கு எதிரான ஆதரவை அமெரிக்கா உட்பட அரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ள இந்த வேளையில் அதற்கு வலுச்சேர்க்கின்ற வகையில் தமிழர்களஅகிய நாம் எமது எழுச்சியைக் காட்டவேண்டியது அவசியமாகின்றது. அந்த எழுச்சியே அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும்.

அந்த எழுச்சியை நாம் காட்டவேண்டுமானால் நமக்குள் இருக்கும் பேதங்களை, நமக்குள் இருக்கும் கிளைகள் எல்லாத்தையும் மறந்து ஒற்றைக் குடையின் கீழ் “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் ஒற்றை வார்த்தைக்காக எல்லா பேதங்களையும் மறந்து நாம் பெரியளவில் ஒன்றுகூடவேண்டும்.

அந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போதுதான் உலக நாடுகளின் கவனம் நம் பக்கம் திரும்பும். எனவே எல்லோருடைய கவனத்தையும் நம் பக்கம் திருப்ப வேண்டும் என்றால் நமது ஒற்றுமையும், ஒன்றுகூடும் கூட்டத்தின் அளவுமே அதனை ஏற்படுத்தும்.

அனைவரினது கவனமும் நம் பக்கம் திரும்பும் போது தான் “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் எமது இலட்சியம் வெற்ரிபெறும் என்றார்.

நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தெரிவிக்கையில்…

சிங்கள பேரினவாத அரசு அந்த மண்ணில் நிகழ்த்திய இனப்படுகொல்ஐக்கு, போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி எமது அன்புப் பிள்ளைகள் இரண்டு பெரும் நடைபயணத்தை ஐரோப்பாவில் ஜெனீவா நோக்கி மேற்கொண்டுவருகின்றனர்.அந்த நடைபயணம் சிறக்க, வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.

அத்தோடு அந்த நடைபயணத்திற்கு வலுச்சேர்த்து வருகின்ற 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரையான தொடர் போராட்டங்களில் எனது அன்புச் சொந்தங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு எமக்காந நீதிக்கான குரலாக ஒலிக்கவேந்டும் என்றார்.Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


எதிர்வரும் நிகழ்வுகள்


Other Articles:
என் தமிழ்மொழி மேல் உனக்கேனிந்த கொலைவெறிடா..? தமிழர்கள் கேட்க வேண்டிய பாடல்-காணொளி (03.01.2012)
2011 மாவீரர் நாளில் வெளியிடப்பட்ட சாந்தன் அவர்களின் பாடல் காணொளி! (05.12.2011)
தாயகம் நேரில் தரிசனம் தந்ததுபோல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற பிரான்ஸ் மாவீரர்நாள் நிகழ்வு. (28.11.2011)
மூன்று தமிழர் தூக்கு தண்டனை தற்கால நிலவரப்படி ரத்தாகுமா ஆகாதா?-தோழர் தியாகு. (04.11.2011)
ஐ.நா. கூட்டத் தொடரில் சிறிலங்காவை நெருக்கும் மனித உரிமை அமைப்புக்கள்! காணொளி (14.09.2011)
ஸ்ரீலங்காவின் இறுதிப்போரும் அதற்கு பின்னரான சம்பவங்களும்! ஒரு நேரடிப் பதிவு!- NDTV-காணொளி (12.09.2011)
கோவையில் அரச அலுவலகங்களை அடித்து நொறுக்கிய மாணவர்கள்-காணொளி இணைப்பு! (29.08.2011)
தியாகச் சுடர் செங்கொடி அவர்களின் வித்துடல் நாளை இறுதி நிகழ்வுகள்: மக்கள் உணர்வாளர்கள் அஞ்சலி (29.08.2011)
கப்பல் வரும் என்ற நம்பிக்கையில் முள்ளிவாய்க்காலில் காத்திருந்த மக்கள்! உண்மைகள் உறங்காது (25.08.2011)
ஜேர்மனியில் உதைபந்தாட்ட மைதானத்தில் ஆரம்ப அணிவகுப்பில் தமிழர் தேசியக் கொடியும் அணிவகுத்தது. (23.08.2011) 
::| Latest News
 

Site Created By: Thiliepan